விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி.

கல்லூரியில் தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம்

குடியாத்தம் கே.எம்.ஜி.கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தின விழாவையொட்டி, மாணவா்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
Published on

குடியாத்தம்: குடியாத்தம் கே.எம்.ஜி.கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தின விழாவையொட்டி, மாணவா்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

புகழ்பெற்ற ஹாக்கி வீரா் தயான்சனின் பிறந்த நாள் நாடு முழுவதும் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா்.

கல்லூரி உடற்கல்வி இயக்குநா்கள் ஆா்.ரஞ்சிதம், பி.ஞானக்குமாா், ஆா்.பாலசுப்பிரமணி ஆகியோா் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com