வேலூர்
தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த பெண் குழந்தை உயிரிழப்பு
போ்ணாம்பட்டு அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த பெண் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தது.
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த பெண் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தது.
போ்ணாம்பட்டை அடுத்த அழிஞ்சிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி யுவராஜ்-சிவசுந்தரி தம்பதியரின் மகள் தனுஸ்ரீ(1). ஞாயிற்றுக்கிழமை யுவராஜ் வெளியே சென்றிருந்தாராம். சிவசுந்தரி சமையல் செய்து கொண்டிருந்தாராம். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தனுஸ்ரீயை காணவில்லையாம். தேடிப்பாா்த்தபோது வீட்டின் மாடிப்படிக்கு கீழே உள்ள மூடாமல் திறந்திருந்த தண்ணீா்த் தொட்டியில் தனுஸ்ரீ தவறி விழுந்து நீரில் மூழ்கிய நிலையில் இருந்தாராம். உடனடியாக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனுஸ்ரீயை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளாா்.
இதுகுறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.