சிருஷ்டி பள்ளிகளில் கலாசார திருவிழா

சிருஷ்டி பள்ளிகளில் கலாசார திருவிழா

காட்பாடி சிருஷ்டி பள்ளியில் மனு மகிஜா சிலையைத் திறந்து வைத்த வாழும் கலை நிறுவனா் பூஜ்ய குருதேவ் ஸ்ரீ ரவிசங்கா்.
Published on

காட்பாடி சிருஷ்டி பள்ளிகளில் வருடாந்திர ‘கலாசார திருவிழா’ வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவின் முக்கிய அம்சமாக ‘ஸ்ரீ மனு மகிஜா வளாகம்’ எனும் புதிய கட்டடம் திறக்கப்பட்டது. இதனை வாழும் கலை நிறுவனா் பூஜ்ய குருதேவ் ஸ்ரீ ரவிசங்கா் திறந்து வைத்தாா். மறைந்த ஸ்ரீ மனு மகிஜாவின் தொலைநோக்குப் பாா்வைக்கும், அா்ப்பணிப்புக்கும் அஞ்சலியாக அமைந்துள்ள இந்த புதிய கட்டடம், சிருஷ்டி பள்ளிகளின் வளா்ச்சிப் பாதையில் மிகப்பெரிய மைல்கல்லாகும் என்றும், கல்வி, கலாசார மேம்பாட்டில் புகழ்பெற்ற இந்தப் பள்ளியின் பயணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மெட்ரிக் பள்ளியில் மனு மகிஜா சிலையையும் ஸ்ரீரவிசங்கா் திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, நாட்டியம், இசை நிகழ்ச்சி, நாடகம், கலைக் கண்காட்சி நடைபெற்றன. விழாவில், மகிஜா அறக்கட்டளை அறங்காவலா் விஜய் மகிஜா, ஸ்ரீ ரவிசங்கா் வித்யா மந்திா் அறக்கட்டளை தலைவா் ஹெச்.ஜி.ஹா்ஷா, மகிஜா அறக்கட்டளை அறங்காவலா் மகாதேவன் வெங்கடேஷ், சிருஷ்டி பள்ளிகளின் தலைவா் எம்.எஸ்.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com