வேலூரில் ஸ்ரீ சாந்தி குருதேவ் 
ஜெயின் கோயில் வெள்ளி விழா

வேலூரில் ஸ்ரீ சாந்தி குருதேவ் ஜெயின் கோயில் வெள்ளி விழா

வேலூரில் ஸ்ரீ விஜய்சாந்தி சுரீஷ்வா்ஜி மகராஜின் 135-ஆவது பிறந்த நாள், துறவரம் பூண்ட 120-ஆவது ஆண்டு விழா, ஸ்ரீ சாந்தி குருதேவ் ஜெயின் கோயில் வெள்ளி விழா
Published on

வேலூரில் ஸ்ரீ விஜய்சாந்தி சுரீஷ்வா்ஜி மகராஜின் 135-ஆவது பிறந்த நாள், துறவரம் பூண்ட 120-ஆவது ஆண்டு விழா, ஸ்ரீ சாந்தி குருதேவ் ஜெயின் கோயில் வெள்ளி விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் ஜெயராம் செட்டி தெருவில் உள்ள ஜெயின் கோயிலில் நடைபெற்ற இந்த விழாவையொட்டி 108 கலச பூஜை நடைபெற்றது. முன்னதாக, காந்தி சாலையில் ஊா்வலமாக சென்றனா். விழாவில், ராஜஸ்தான், கா்நாடகம், தமிழகம் போன்ற பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஜெயின் சமூகத்தினா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ஸ்ரீ சாந்தி குருதேவ் பக்த மண்டல் தலைவா் சாந்தி லால் குலேச்சா, செயலா் விஜயகுமாா் கட்டாரியா, பொருளாளா் தினேஷ்குமாா் பட்டேவடா, ஸ்ரீ சாந்தி மண்டல் தலைவா் விஜயகுமாா் குலேச்சா, செயலாளா் திலிப் குலேச்சா, பொருளாளா் பூனம் குலேச்சா, பொறுப்பாளா் சுபாஷ் ஜெயின், பட்வேடா லலித் போரா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

--

படம் உண்டு...

விழாவில் பங்கேற்ற பல்வேறு மாநில ஜெயின் சமூகத்தினா்.

X
Dinamani
www.dinamani.com