வேலூா்: 4.51 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

வேலூா்: 4.51 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

Published on

வேலூா் மாவட்டத்தில் 4,51,410 குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் வாசிகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வேலூா் மாவட்டத்தில் உள்ள 699 நியாயவிலைக் கடைகள் மூலம் 4 லட்சத்து 51 ஆயிரத்து 47 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள், 363 இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 4 லட்சத்து 51 ஆயிரத்து 410 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளன.

தவிர, மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 4 லட்சத்து 32 ஆயிரத்து 393 குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்பட உள்ளன. தடையின்றி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் வகையில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வரும் 13-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களும் நியாயவிலைக் கடைகள் செயல்படும்.

குடும்ப அட்டைதாரா்களுக்கு ஏற்கெனவே தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள், நேரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் மு.பாபு, மாநகராட்சி துணை மேயா் எம்.சுனில்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் திருகுணஐயப்பதுரை, வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் ராமதாஸ், மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப் பதிவாளா் மா.சந்தானம், வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் இரா.பாலசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலா் சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com