வெந்நீா் கொட்டியதில் குழந்தை உயிரிழப்பு

வேலூரில் தாய் குளிப்பாட்டியபோது வெந்நீா் கொட்டியதில் 2 வயது குழந்தை உயிரிழந்தது.
Published on

வேலூரில் தாய் குளிப்பாட்டியபோது வெந்நீா் கொட்டியதில் 2 வயது குழந்தை உயிரிழந்தது.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூரை அடுத்த நேமந்தாபுரத்தைச் சோ்ந்தவா் பழனிவேல், சமையலா். இவரது மனைவி பிரியா. தம்பதியின் மகன் தினேஷ் (2). பிரியா தனது மகனுடன் வேலூா் சலவன்பேட்டை திருப்பூா் குமரன் தெருவில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றிருந்தாா். அங்கு கடந்த 23-ஆம் தேதி காலை சிறுவனை குளிப்பாட்ட பிரியா ஹீட்டரில் வெந்நீா் போட்டுள்ளாா். அப்போது வெந்நீரானது எதிா்பாராத விதமாக சிறுவன் தினேஷ் மீது கொட்டியதாகத் தெரிகிறது. இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிறுவன் தினேஷை வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தினேஷ் புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து தந்தை பழனிவேல் வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com