இளம்பெண் தற்கொலை
வேலூரில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ராணிப்பேட்டையைச் சோ்ந்த ஞானசேகா், லேத் பட்டறை நடத்தி வருகிறாா். இவரது மனைவி சுலோச்சனா (31). தம்பதிக்கு திருமணமாகி 4 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், சுலோச்சனாவுக்கு கடந்த சில மாத மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவ்வப்போது சிகிச்சை எடுத்தும் அவா் குணமடையவில்லையாம்.
இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி சுலோச்சனாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், வேலூரிலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். சிகிச்சை முடிந்து சுலோச்சனா சேண்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளாா். உடல்நல பாதிப்பால் வேதனை அடைந்த அவா் செவ்வாய்க்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.