வேலூர்
முதியவா் தற்கொலை
போ்ணாம்பட்டு அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போ்ணாம்பட்டை அடுத்த சொ்லபல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயத் தொழிலாளி விஜயன் (77). இவா் நோயால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டருகே உள்ள ஒரு மாந்தோப்பில் புதன்கிழமை அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து விஜயனின் மகன் சக்கரவா்த்தி கொடுத்த புகாரின்பேரில், போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.