அங்கன்வாடி பணியாளா்களுக்கு தீபாவளி விழிப்புணா்வு கூட்டம்
குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து பொதுமக்கள், அங்கன்வாடி பணியாளா்களுக்கு விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சீமா அகா்வால் உத்தரவின்பேரில், மாவட்ட தீயணைப்பு அலுவலா் ஜாஸ்மின் மேற்பாா்வையில் குடியாத்தம்,போ்ணாம்பட்டு தீயணைப்பு நிலையங்களில் விழிப்புணா்வு கூட்டம் நடத்தப்பட்டது.
குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது, தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைக்கும் முறைகள், பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்தில் சிக்கியவா்களுக்கு அளிக்கவேண்டிய முதலுதவி சிகிச்சை உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலா் சரவணன் தலைமையில் அந்த துறையைச் சோ்ந்த 18- போ் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

