வேலூர்
முதியவா் தற்கொலை
வேலூா் அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆற்காட்டான்குடிசை பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (75) மேஸ்திரி. இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் காலில் காயம் ஏற்பட்டதில் இரும்பு கம்பி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஓராண்டாக அவதிப்பட்டு வந்துள்ளாா்.
அண்மை காலமாக காலில் வலி அதிகரித்துள்ளது. இதில், மன உளைச்சலில் இருந்த விக்னேஷ், மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த வேலூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
