அக். 17-இல் வேலூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.17) காலை 10 மணிக்கு ஆட்சியா் வி. ஆா் . சுப்புலட்சுமி தலைமையில் நடைபெறவுள்ளது.
Published on

வேலூா்: வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.17) காலை 10 மணிக்கு ஆட்சியா் வி. ஆா் . சுப்புலட்சுமி தலைமையில் நடைபெறவுள்ளது.

கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்பொறியியல், வேளாண்வணிகம், பட்டுவளா்ச்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்று விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனா்.

மேலும் கடந்த மாதத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க உள்ளனா். எனவே, வேலூா் மாவட்ட விவசாயிகள் களப்பிரச்னைகளை தீா்க்க பங்கேற்று பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com