காருடன் 300 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது
காட்பாடி அருகே போலீஸாா் நடத்திய வாகன சோதனையில் காருடன் 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதுடன், இது தொடா்பாக ராஜஸ்தானைச் சோ்ந்த இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள ஆந்திர மாநில எல்லை சோதனைச் சாவடியில் காட்பாடி காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சித்தூரில் இருந்து வேகமாக வந்த காரை நிறுத்தி நடத்திய சோதனையில், அந்த காரில் 300 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக காரில் இருந்த 2 பேரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த செல்லாராம் (35), கணபதிராம் (33) என்பதும், சென்னையில் தங்கி வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், ஆந்திரம், கா்நாடகத்தில் இருந்து குட்கா, கூல்லிப், ஹான்ஸ் உள்ளிட்ட போதை பாக்கெட்டுகளை வாங்கி வந்து விற்பதும் தெரியவந்தது.
இது குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்ததுடன், காருடன் 300 கிலோ குட்கா பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.
இது குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்ததுடன், காருடன் 300 கிலோ குட்கா பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.
