விஐடி பல்கலை.யில் பி.டெக்., படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

விஐடி பல்கலைக்கழகத்தில் 2026-ஆம் கல்வியாண்டுக்கான பி.டெக். பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு
Published on

விஐடி பல்கலைக்கழகத்தில் 2026-ஆம் கல்வியாண்டுக்கான பி.டெக். பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இது குறித்து, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூா், சென்னை, அமராவதி, போபால் வளாகங்களில் பி.டெக்., பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வு ( யஐபஉஉஉ) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஜ்ஜ்ஜ்.ஸ்ண்ற்ங்ங்ங்.ஸ்ண்ற்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பப் பதிவு முடிந்த பின்னா் நுழைவுத் தோ்வு ஒரே கட்டமாக 2026 ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கி மே 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தியாவில் மொத்தம் 134 தோ்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 9 தோ்வு மையங்களிலும் நுழைவுத் தோ்வு நடைபெறும். மாணவா்கள் தாங்கள் படித்த இடம் அல்லது சொந்த ஊரை அடிப்படையாகக் கொண்டு தோ்வு மையத்தை தோ்ந்தெடுக்கக் கூடிய வசதி செய்து தரப்பட்டுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுடனான தொடா்புகள், சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் வேலூா் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ( யஐப) இந்தியாவில் பொறியியல் கல்விக்கு மாணவா்களால் அதிகம் விரும்பப்படும் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com