குடியாத்தம் சுப்பிரமணியா் கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சிக்குப்பின் வேலுடன் சுப்பிரமணியா்.
வேலூர்
சுப்பிரமணியா் கோயிலில் சூரசம்ஹாரம்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை இரவு சூரசம்ஹாரம்
குடியாத்தம்: குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை இரவு சூரசம்ஹாரம் நடைபெற்றது.
இதையொட்டி, காலை 6 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம், மாலை 5 மணிக்கு ஆட்டு கிடா வாகனத்தில் ஜெயந்திநாதா் அலங்காரம், 6 மணிக்கு சூரசம்ஹாரம் எனும் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து 7 மணிக்கு சுவாமிகளுக்கு சாந்தி அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் கே.எம்.மகாலிங்கம், விழா ஒருங்கிணைப்பாளா் எம்.சரவணன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஏ.ஜி.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

