சுடச்சுட

  

  டிச.1-ல் பண்ருட்டி ரயில்வே கேட் திறப்பு: கடலூரில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு

  By நெய்வேலி  |   Published on : 16th October 2015 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பண்ருட்டியில் மூடப்பட்டுள்ள ரயில்வே கேட் டிசம்பர் 1-ஆம் தேதி திறக்கப்படும் எனவும், இருசக்கர வாகனம் மற்றும் பாதசாரிகள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் கடலூரில் புதன்கிழமை நடந்த ஆய்வுக் கூட்டத்தில் தீர்வு காணப்பட்டது.

  பண்ருட்டி-சென்னை சாலையில் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தாற்காலிகமாக ரயில்வே கேட் மூடப்பட்டது. ஆனால் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருவதற்கான மாற்றுப் பாதை முறையாக அமைக்கப்படவில்லை.

  இதன் காரணமாக மழைக்காலத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில், ரயில்வே கேட்டை தாற்காலிகமாக திறந்து விட வேண்டும், மந்த கதியில் நடைபெறும் மேம்பாலப் பணியை விரைந்து நடத்த வேண்டும், கண்டரக்கோட்டையில் மணல் குவாரியால் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும், இல்லை என்றால், அக்டோபர் 27-ஆம் தேதி மக்களே ரயில்வே கேட்டை திறக்கும் போராட்டத்தை அனைத்து தரப்பினரையும் அழைத்து நடத்துவோம் என வணிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

  இந்நிலையில், கடலூரிலுள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி தலைமையில் ரயில்வேத் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் உயர் அதிகாரிகள், பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன், வட்டாட்சியர் கீதா, மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கத் தலைவர் சண்முகம் ஆகியோர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

  இதில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி பண்ருட்டி ரயில்வே கேட்டை பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும் பயன்படுத்தும் விதமாக திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

  மேலும் மேல்குமாரமங்களத்துக்கு மணல் கிடங்கை மாற்றிய பின்னர் கண்டக்கோட்டை-ராசாபாளையம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையை சீரமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் 27-ஆம் நடைபெறுவதாக அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai