Enable Javscript for better performance
2016-ஆம் ஆண்டை அம்பேத்கர் ஆண்டாக கொண்டாட முடிவு: கர்நாடக முதல்வர் சித்தராமையா- Dinamani

சுடச்சுட

    

    2016-ஆம் ஆண்டை அம்பேத்கர் ஆண்டாக கொண்டாட முடிவு: கர்நாடக முதல்வர் சித்தராமையா

    By பெங்களூரு  |   Published on : 15th April 2016 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2016-ஆம் ஆண்டை அம்பேத்கர் ஆண்டாக கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

    கர்நாடக அரசு சார்பில், பெங்களூரு விருந்தினர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாள் விழாவைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

    இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். அவரது சிந்தனைகள், கொள்கைகள், தத்துவங்கள் அனைத்தும் மக்களைச் சென்றடையும் வகையில் 2016-ஆம் ஆண்டை அம்பேத்கர் ஆணடாக கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    பெங்களூரு விதானசெளதா முன் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்படும். இதேபோல, யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்டுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முன்னாள் அமைச்சரும், தலித் தலைவருமான பசவலிங்கப்பா பெயரில் ஆய்வு இருக்கை உருவாக்கப்படும்.

    லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் அம்பேத்கர் பெயரில் ஆய்வு இருக்கை அமைப்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றார்.

    பொதுப் பணித் துறை அமைச்சர் மகாதேவப்பா பேசியது:

    டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 2016-ஆம் ஆண்டை அம்பேத்கர் விழாவாகக் கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது.  இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் ஏழைகளின் பொற்காலம் மலர்ந்துள்ளது. தலித் மக்கள், ஏழைகளின் மேம்பாட்டுக்குத் தேவையான திட்டங்களை வகுத்து, தாராளமாக நிதி ஒதுக்கி, அந்த நிதியை தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே ஒதுக்க சட்டப் பாதுகாப்பு அளித்திருப்பவர் நமது முதல்வர் சித்தராமையா.

    தலித் மக்களின் மக்கள்தொகைக்கேற்ப பட்ஜெட்டின் மொத்தத் தொகையில் நிதி ஒதுக்கியவர் சித்தராமையா. அம்பேத்கர் கண்ட கனவு சித்தராமையா ஆட்சியில் நனவாகி வருகிறது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai