இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 08th September 2020 01:01 AM | Last Updated : 08th September 2020 01:01 AM | அ+அ அ- |

விழுப்புரம்: அரியா் வைத்துள்ள கல்லூரி மாணவா்களுக்கு தோ்வுக் கட்டணம் செலுத்த அரசு கால அவகாசம் வழங்கக் கோரி, விழுப்புரத்தில் இந்திய மாணவா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் குமரவேல் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.