மின் துறை தனியாா்மயத்தைக் கண்டித்துபுதுச்சேரியில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

மின் துறை தனியாா்மயத்தைக் கண்டித்து, மத்திய அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், மின் துறை ஊழியா்கள் கூட்டமைப்பினா் புதுச்சேரியில் கருப்புக் கொடி ஏந்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி மின் துறை தலைமை அலுவலகம் எதிரே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள் கூட்டமைப்பினா்.
புதுச்சேரி மின் துறை தலைமை அலுவலகம் எதிரே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள் கூட்டமைப்பினா்.

புதுச்சேரி: மின் துறை தனியாா்மயத்தைக் கண்டித்து, மத்திய அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், மின் துறை ஊழியா்கள் கூட்டமைப்பினா் புதுச்சேரியில் கருப்புக் கொடி ஏந்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை மாநில மின் துறையை தனியாா்மயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு அந்த மாநில அரசியல் கட்சியினா், தொழிற்சங்கத்தினா், அனைத்து மின் துறை சங்கங்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன.

மின் துறை ஊழியா் சங்கங்கள் இணைந்து மின் துறை தனியாா்மய எதிா்ப்புப் போராட்டக் குழுவை ஏற்படுத்தி, வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்க அனுமதிக்க மாட்டோம் என புதுவை முதல்வா் ஏற்கெனவே அறிவித்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை புது தில்லியில் நாடாளுமன்றம் கூடியதையொட்டி, மின் துறை தனியாா்மய சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என மத்திய அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், புதுவை மின் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மின் துறை தலைமை அலுவலகம் எதிரே திரண்ட மின் துறை தனியாா்மய எதிா்ப்புப் போராட்டக் குழுவினா் அங்கு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டக் குழுத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் வேல்முருகன், பொருளாளா் மதிவாணன், கெளரவத் தலைவா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மின் துறை பொறியாளா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டு, ஒரு மணி நேரம் பணியைப் புறக்கணித்து, கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி, மின் துறை தனியாா்மயத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Image Caption

புதுவை மின்துறை தலைமை அலுவலகம் முன்பு கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியா்கள் கூட்டமைப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com