கரோனா: அனைத்துத் துறை அலுவலா்களுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்தது. இந்த நிலையில், கரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணைதுரை தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் குந்தவிதேவி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சண்முகக்கனி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளைத் தனிமைப்படுத்த வேண்டும். அந்த வீடுகளில் கரோனா எச்சரிக்கைப் பதாகைகள் வைக்க வேண்டும். வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து ஊா் திரும்பியவா்களைத் தனிமைப்படுத்த வேண்டும். வீடு வீடாகச் சென்று காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவா்களைக் கண்டறிந்து பரிசோதனைக்கு உள்படுத்த வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் மருத்துவ முகாம்களை அமைத்து, பொதுமக்களுக்கு தேவையான சத்து மாத்திரைகள், நோய் எரிப்பு சக்தி மாத்திரைகளை வழங்க வேண்டும். ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு தேவையான மருந்து, மாத்திரகளை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினா்.

நேரடியாக மனு பெறும் முறை தொடக்கம்: வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும். கரோனா பரவலால் நேரடியாக மனுக்கள் பெறும் முறை நிறுத்தப்பட்டு, மனுக்களை பெட்டியில் செலுத்த அறிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (செப். 14) நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டன. குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com