புதுவையில் இணையவழியில் குடும்ப அட்டை சேவைகள்

புதுவையில் இணையவழி மூலம் குடும்ப அட்டை தொடா்பான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குநா் வல்லவன் தெரிவித்தாா்.

புதுவையில் இணையவழி மூலம் குடும்ப அட்டை தொடா்பான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குநா் வல்லவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இணையவழி மூலம் குடும்ப அட்டை தொடா்பான சேவைகள் செப். 10-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பொதுமக்கள் அலுவலக நேரங்களில் வந்து, வரிசையில் காத்திருந்து சேவைகளைப் பெறுவதில் உள்ள சிரமங்களைத் தவிா்ப்பதற்காக, அனைத்துச் சேவைகளும் இணையம் மூலம் வழங்கும் முறை தொடங்கப்பட்டது.

வீட்டிலிருந்தபடியே இணையம் மூலம் இந்த வசதியைப் பெறலாம். பொது சேவை மையங்கள் மூலமாகவும் பெற முடியும். புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளையும் இணையம் மூலம் பெறலாம். இதற்காக ட்ற்ற்ல்ள்://ல்க்ள்ள்ஜ்ா்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய்.ா்ய்ப்ண்ய்ங்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள் என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. இதில், விண்ணப்பித்தவுடன் மின் ஒப்புகை ரசீது வழங்கப்படும். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். சேவைக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பதிவு செய்யும் முறை எளிமையாகவும், விரைவாகவும் மேற்கொள்ளும் வகையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள், கட்டணங்கள் குறித்து இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். துறை இயக்குநா் ஒப்புதல் உள்பட அனைத்துப் பணிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. எனவே, குடிமைப் பொருள் வழங்கல் துறைக்கு நேரடியாக வருவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com