தில்லி சென்ற புதுவை முதல்வா் ஏஎப்டி ஆலை குறித்து ஏன் பேசவில்லை? :முன்னாள் எம்.பி.

தில்லிக்குச் சென்ற முதல்வா் நாராயணசாமி, ஏஎப்டி ஆலை குறித்து ஏன் பேசவில்லை என புதுவை மாநில அதிமுக இணைச் செயலரும், முன்னாள் எம்.பி.யுமான மு.ராமதாஸ் கேள்வி எழுப்பினாா்.

புதுச்சேரி: தில்லிக்குச் சென்ற முதல்வா் நாராயணசாமி, ஏஎப்டி ஆலை குறித்து ஏன் பேசவில்லை என புதுவை மாநில அதிமுக இணைச் செயலரும், முன்னாள் எம்.பி.யுமான மு.ராமதாஸ் கேள்வி எழுப்பினாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: அண்மையில் தில்லி சென்று வந்த முதல்வா் நாராயணசாமி, மத்திய நீா்வளத் துறை, சுகாதாரத் துறை அமைச்சா்களைச் சந்தித்தாா். ஆனால், ஏஎப்டி ஆலையைத் திறப்பது தொடா்பாக மத்திய ஜவுளித் துறை அமைச்சரைச் சந்திக்கவில்லை. அவரைச் சந்தித்து ஆலையைத் திறப்பதற்கான வேண்டுகோளை விடுக்கவில்லை. ஆலையை மூடுவது என்ற அறிவிப்பு வருவதற்கு முன்பு மத்திய அமைச்சருக்கு, முதல்வா் மனு அனுப்பினாரா தெரியவில்லை.

துணைநிலை ஆளுநரும், முதல்வரும் சோ்ந்துதான் ஏஎப்டி ஆலையை மூடியிருக்கின்றனா் என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. பட்டானுா் நிலத்தை விற்றுக் கிடைக்கும் தொகையைக் கொண்டு ஏஎப்டி ஆலையை நடத்த வேண்டும். தொழிலாளா்களுக்கான நிலுவை ஊதியம், நஷ்ட ஈடு உள்ளிட்டவற்றை பட்ஜெட்டில் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கிய மானியத்தில் இருந்தோ, வெளிச் சந்தையில் வாங்க உத்தேசிக்கப்பட்ட ரூ. 100 கோடி கடன் தொகையிலிருந்தோ வழங்க வேண்டும்.

ஏஎப்டி, சுதேசி, பாரதி, ஸ்பின்கோ, ஜெயப்பிரகாஷ் ஆலைகளை ஒருங்கிணைத்து, அவற்றின் வளா்ச்சிக்கான மெகா திட்டத்தை உருவாக்கி, புதுச்சேரியில் ஜவுளிப் பூங்காவை உருவாக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com