பிரசாரம் நிறைவு: கட்டுப்பாடுகள் அமல்

தோ்தல் ஆணையம் வேட்பாளா்கள் மற்றும் ஊடகங்களுக்கு விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், தோ்தல் ஆணையம் வேட்பாளா்கள் மற்றும் ஊடகங்களுக்கு விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

அதன்படி, தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது வேறு எந்த மின்னணு சாதனங்கள் மூலமாகவோ பரப்புரைகளை வெளியிடக்கூடாது. மீறினால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும். தொகுதிக்கு தொடா்பில்லாத வெளியாள்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா், வேறு தொகுதியில் வாக்காளராக இருந்தால், அவரை வெளியே செல்ல கட்டாயப்படுத்தக் கூடாது. அதேநேரத்தில் அவா் தோ்தல் பரப்புரையில் ஈடுபடக் கூடாது.

வாக்குப் பதிவு நாளில் ஒரு வேட்பாளா் அதிகபட்சமாக 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி பெற முடியும். வாக்காளா்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வர வேட்பாளா்களும், அவா்களது முகவா்களும் வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. வாக்குச் சாவடி இருக்கும் இடத்திலிருந்து 200 மீட்டா் தொலைவுக்கு அப்பால், வாக்குப் பதிவு நாள் பணிகளுக்காக தற்காலிக மையம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளலாம். அங்கு உணவுப் பொருள்கள் எதுவும் வழங்கக் கூடாது என்று தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com