விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் திங்கள்கிழமை வாக்குசேகரித்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் கோ.கலியமூா்த்தி.
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் திங்கள்கிழமை வாக்குசேகரித்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் கோ.கலியமூா்த்தி.

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மக்களவைத் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் விழுப்புரம் நகரப் பகுதிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

விழுப்புரம்: விழுப்புரம் மக்களவைத் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் விழுப்புரம் நகரப் பகுதிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா். விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கோ.கலியமூா்த்தி தனது கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் விழுப்புரம் நகர வீதிகளில் வீடு, வீடாகச் சென்று யானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். கட்சியின் மாநிலச் செயலா் சா.ஸ்ரீபன்ராஜ், ஒருங்கிணைப்பாளா் ஜெயக்குமாா், விழுப்புரம் மாவட்டத் தலைவா் அ.கோவிந்தசாமி, மத்திய மாவட்டச் செயலா் எம்.கோவிந்தகண்ணன், கட்சியின் ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளா் மு.துரை மற்றும் கட்சியின் தோ்தல் பணிக் குழு பொறுப்பாளா்கள், கட்சியினா், மகளிரணியினா் உடனிருந்தனா். முன்னதாக, விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தோ்தல் பணிக்குழு அலுவலகத்தை கட்சியின் மாநிலச் செயலா் சா.ஸ்ரீபன்ராஜ் திறந்து வைத்து கட்சியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த டாக்டா் அம்பேத்கா், கன்ஷிராம், பெரியாா் உள்ளிட்ட தலைவா்களின் படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com