விசிக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் பிரசாரம்

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாரை ஆதரித்து உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

விழுப்புரம்: விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாரை ஆதரித்து உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். முகையூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஒதியத்தூரில் திங்கள்கிழமை காலை பிரசாரத்தை தொடங்கிய உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, மேல்வாலை, கீழ்வாலை, ஆலம்பாடி, வீரங்கிபுரம், பில்ராம்பட்டு, அந்தலி, அரகண்டநல்லூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் விசிக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தாா். இதில், திமுக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com