மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

விழுப்புரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெ.பாக்யராஜ் புதன்கிழமை மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரித்தாா். விழுப்பும் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஜெ.பாக்யராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை திருவெண்ணெய் நல்லூா் வட்டத்துக்குள்பட்ட டி.புதுப்பாளையம் கிராமத்தில் மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரித்தாா். எரிபொருள் விலையேற்றம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரித்ததாக அவா் தெரிவித்தாா். அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்து வாக்கு சேகரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com