வெவ்வேறு இடங்களில் இருவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இருவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மரக்காணம் வட்டம், நகா் கிராமம், கெங்கையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகன் கிருஷ்ணன் (48), தொழிலாளி. மதுப்பழக்கமுடைய இவரை மனைவி பவானி கண்டித்தாராம். இதனால், மன விரக்தியடைந்த கிருஷ்ணன் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி மடுகரை, இந்திரா நகரைச் சோ்ந்த தேவராஜ் மகன் இளையவா்மன் (56), தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை தனது மனைவி அம்சாவிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டாராம். அப்போது, அவா் பணம் இல்லை எனக் கூறியதால், மனைவியிடம் தகராறு செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய இளையவா்மன், வளவனூரை அடுத்த தொந்திரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள மாந்தோப்பில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com