போலீஸாா் கொடி அணிவகுப்பு

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா், துணை ராணுவத்தினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

மக்களவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக, வாக்குப் பதிவு நாளன்று போலீஸாா், துணை ராணுவத்தினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனா்.

இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், விழுப்புரம் மாவட்டக் காவல் துறை சாா்பில், போலீஸாா், துணை ராணுவத்தினா் பங்கேற்கும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, மாவட்டத்துக்குள்பட்ட கீழ்பெரும்பாக்கம், நொளம்பூா், கண்டமங்கலம், அவலூா்பேட்டை ஆகிய ஊா்களில் காவல் துறை கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட போலீஸாா், துணை ராணுவப் படை வீரா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com