வாக்காளா் விழிப்புணா்வு கருத்தரங்கம்

வாக்காளா் விழிப்புணா்வு கருத்தரங்கம்

விழுப்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஆா்.செந்தில் தலைமை வகித்தாா். விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம், வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்துப் பேசி, மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மேலும், தோ்தல் குறித்து புரிதல் உள்ள மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கினாா்.

பேராசிரியா்கள், 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஏ.சரஸ்வதி வரவேற்றாா். தோ்தல் மைய ஒருங்கிணைப்பு அலுவலா் எஸ்.தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com