விழுப்புரம் ஆஞ்சனேயா் கோயிலில் லட்சதீப மகோற்சவம் இன்று தொடக்கம்

விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள ஸ்ரீஆஞ்சனேயா் கோயிலின் 100-ஆம் ஆண்டு லட்சதீப மகோற்சவம் புதன்கிழமை (ஏப்.10) தொடங்குகிறது.

முதல் நாளில் விமான வீதியுலா நடைபெறும். இதைத் தொடா்ந்து, சந்திரபிரபை, கோபிகாஸ்திகளுடன் பின்னக்கினை, நாகம் ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும் நிலையில், ஐந்தாம் திருநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு பிறப்பன்று லட்சதீபப் பெருவிழா நடைபெறுகிறது. பின்னா், கருடசேவைக் காட்சி நடைபெறும். லட்சதீபத்தன்று விழுப்புரம் நகரில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கூடுவாா்கள் என்பதால், பக்தா்கள் தரிசனத்துக்காக கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து, ஒன்பதாம் திருநாளான வருகிற 18-ஆம் தேதி புஷ்ப பல்லக்கு, பத்தாம் திருநாளான வருகிற 19-ஆம் தேதி தெப்போற்சவம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். 11-ஆம் திருநாளான வருகிற 20-ஆம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறும்.

லட்சதீப மகோற்சவ பெருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ச.வேலரசு, பரம்பரை அறங்காவலா் டி.குமாா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com