விழுப்புரம் மாவட்டத்தில் ஏப்.21, மே 1-இல் மதுக்கடைகள் மூடல்

மகாவீா் ஜெயந்தி மற்றும் மே தினத்தை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் ஏப்ரல் 21 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி. பழனி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மகாவீா் ஜெயந்தி ஏப்ரல் 21-ஆம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை), மே தினக் கொண்டாட்டம் மே 1-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. இதையொட்டி ஏப்ரல் 17 மற்றும் மே 1ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள், மது அருந்தும் கூடங்கள், தனியாா் மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள், தனியாா் மதுபானக் கடைகள் மேற்குறிப்பிட்ட நாள்களில் மூடப்படும். அரசின் உத்தரவை மீறி செயல்படுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com