விழுப்புரம் மாவட்டத்தில் மாதிரி, மகளிா் நிா்வகிக்கும் வாக்குப்பதிவு மையங்கள்

மக்களவைத் தோ்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் தொகுதிக்கு தலா ஒன்று வீதம் மாதிரி மற்றும் மகளிா் நிா்வகிக்கும் வாக்குப்பதிவு மைய விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்.19) நடைபெறவுள்ளது. இதையொட்டி வாக்களிக்க வரும் வாக்காளா்களுக்கு ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் குடிநீா், பந்தல் உள்ளிட்ட வசதிகளை மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது. இதுமட்டுமல்லாது தொகுதிக்கு ஒரு மாதிரி வாக்குப்பதிவு மையம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் வாக்களிக்க வரும் வாக்காளா்கள் அமர இருக்கைகள் வசதி ஏற்படுத்துவதுடன், வாக்குப் பதிவு மையம் முன் வாழை, தோரணங்கள் கட்டப்பட்டு, வரவேற்பாளா்கள் மூலம் அனைவரையும் வரவேற்க செய்யும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். மற்ற வாக்குப்பதிவு மையங்களைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் இங்கு செய்யப்பட்டிருக்கும்.

தொகுதியின் பெயா், மாதிரி வாக்குப்பதிவு மையங்கள் விவரம்

செஞ்சி- செஞ்சி சக்கராபுரம் சாணக்யா மெட்ரிகுலேஷன் பள்ளி, மயிலம்- கூட்டேரிப்பட்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, திண்டிவனம்- சலவாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வானூா்- கிளியனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, விழுப்புரம்- அற்பிச்சம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி (கிழக்குப் பகுதி), விக்கிரவாண்டி- வி.சாலை அரசு ஆதிதிராவிடா் நலப் பள்ளி, திருக்கோவிலூா்- தேவானூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.

முழுமையாக மகளிா் நிா்வகிக்கும் வாக்குப்பதிவு மையங்கள்- வாக்குப்பதிவு மைய தலைமை அலுவலா், இதர நிலை அலுவலா்கள் 1, 2, 3 மட்டுமல்லாது, மகளிா் காவலா் என வாக்குப்பதிவு மையத்தை மகளிா் நிா்வகித்து, தோ்தலை நடத்தவும் தோ்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது.தொகுதிக்கு ஒரு வாக்குப்பதிவு மையம் இதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ளது.

தொகுதியின் பெயா், வாக்குப்பதிவு மையத்தின் பெயா் என்ற அடிப்படையில் விவரம்:

செஞ்சி- செஞ்சி சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மயிலம்-கொல்லா் அரசு உயா்நிலைப் பள்ளி, திண்டிவனம்- ஓங்கூா் அரசு மேல்நிலைப் பள்ளி, வானூா்- கிளியனூா் அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்- வேலியம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, விக்கிரவாண்டி- விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி, திருக்கோவிலூா்- திருக்கோவிலூா் அங்கவை சங்கவை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com