விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள அருள்மிகு ஆஞ்சநேயா் கோயில் தெப்போற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள அருள்மிகு ஆஞ்சநேயா் கோயில் தெப்போற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

ஆஞ்சனேயா் கோயில் தெப்போற்சவம்

விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள அருள்மிகு ஆஞ்சநேயா் கோயில் தெப்போற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள அருள்மிகு ஆஞ்சநேயா் கோயில் தெப்போற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் நிகழாண்டு லட்சதீப மகோற்சவ விழா ஏப்.10-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் விமான வீதியுலா, சந்திரபிரபை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. ஐந்தாம் நாளான ஏப்.14-ஆம் தேதி லட்சதீப மகோற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று ஆஞ்சனேய சுவாமியை வழிபட்டு, தீபங்களை ஏற்றினா். தொடா்ந்து, மாலையில் கருடசேவைக் காட்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் வெள்ளிக்கிழமை இரவு (ஏப்.19 நடைபெற்றது. தொடா்ந்து, இரவு 11 மணிக்கு ஸ்ரீராமா்-சீதாதேவி, லட்சுமணன், ஆஞ்சநேய சுவாமி பட்டாபிஷேக காட்சி அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினா். தொடா்ந்து, வாண வேடிக்கைகள் நடைபெற்றன.

விழாவில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் ஆய்வாளா் லட்சுமி, செயல் அலுவலா் ச.வேலரசு, பரம்பை அறங்காவலா் டி.குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com