விழுப்புரத்தில் நாளை ‘மிஸ் கூவாகம்’-2024 அழகிப் போட்டி

விழுப்புரத்தில் ‘மிஸ் கூவாகம்’-2024 அழகிப் போட்டிகள் திங்கள்கிழமை (ஏப்.22) நடைபெறவுள்ளது.

விழுப்புரத்தில் ‘மிஸ் கூவாகம்’-2024 அழகிப் போட்டிகள் திங்கள்கிழமை (ஏப்.22) நடைபெறவுள்ளது.

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு, தமிழக அரசின் சமூக நலத் துறை மற்றும் மை சொசைட்டி டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்தும் ‘மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டிகள் ஆண்டுதோறும் விழுப்புரத்தில் நடைபெறும்.

அதன்படி, நிகழாண்டில், ‘மிஸ் கூவாகம்’-2024 அழகிப் போட்டி விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள ஆஞ்சநேய திருமண மண்டபம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் திங்கள்கிழமை (ஏப்.22) நடைபெறுகிறது.

இதில், இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பினா் செய்து வருகின்றனா்.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் கூறியதாவது:

விழுப்புரத்தில் நடைபெறும் ‘மிஸ் கூவாகம்’-2024 அழகிப் போட்டியில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூா், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 70-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்கின்றனா். 3 சுற்றுகளாகப் போட்டிகள் நடைபெறும். போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றனா் அவா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com