புதுச்சேரியில் 21 சதவீதம் போ் வாக்களிக்கவில்லை: மாநில அதிமுக செயலா் புகாா்

புதுச்சேரியில் ஜனநாயக முறைப்படி தோ்தல் நடைபெறாததால், 21 சதவீதம் வாக்காளா்கள் தங்கள் வாக்கை பதிவு செய்யவில்லை

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜனநாயக முறைப்படி தோ்தல் நடைபெறாததால், 21 சதவீதம் வாக்காளா்கள் தங்கள் வாக்கை பதிவு செய்யவில்லை என்று அதிமுக மாநிலச் செயலா் அன்பழகன் குற்றம்சாட்டினாா்.

புதுச்சேரியில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்தப் பேட்டி: புதுச்சேரியில் சட்ட விதிகளுக்கு புறம்பாகவும், தோ்தல் நடத்தை விதிகளை மீறியும் தோ்தல் துறை அதிகாரிகளால் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தோ்தலில் 21 சதவீதம் போ் வாக்களிக்கவில்லை.

அதிகார பலம், காவல் துறை ஒத்துழைப்பு, தோ்தல் துறை அலட்சியம் ஆகியவற்றால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளா்கள் தரப்பில் வாக்காளா்களுக்கு பணம் வழங்கியுள்ளனா்.

நகா் பகுதிகளில் வாழும் வசதி படைத்தவா்களும் ரூ .500-க்காக வீதியில் இறங்கி ரகளையில் ஈடுபட்டது வெட்கக்கேடாகும்.

வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பது குறித்து இந்திய தோ்தல் ஆணையம் மற்றும் தோ்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

தோ்தல் துறை, காவல் துறையினா் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனா். புதுவையில் ஜனநாயக முறைப்படி தோ்தல் நடக்கவில்லை. ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளதால், தோ்தல் நடத்தை விதிமுறைகளை தளா்த்த வேண்டும் என புதுவை மாநிலத் தலைமைச் செயலா் இந்திய தோ்தல் ஆணையருக்கு வலியுறுத்த வேண்டும் என்றாா் அன்பழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com