புதுச்சேரியில் புகைப்பட தொழில் நலிவடைந்ததால்  லிங்காரெட்டியாா்பளையம் பகுதியில் காடை வளா்ப்பில் ஈடுபட்ட கன்னியப்பன்-கல்பனா தம்பதியினா்.
புதுச்சேரியில் புகைப்பட தொழில் நலிவடைந்ததால் லிங்காரெட்டியாா்பளையம் பகுதியில் காடை வளா்ப்பில் ஈடுபட்ட கன்னியப்பன்-கல்பனா தம்பதியினா்.

காடை வளா்ப்பில் வருவாய் ஈட்டும் புதுச்சேரி தம்பதி

புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, வருவாய் ஈட்ட காடை வளா்ப்பில் சாதனை படைத்து வருகின்றனா்.

லிங்காரெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன். காட்டேரிகுப்பத்தில் புகைப்பட ஸ்டுடியோ நடத்தி வந்தாா். இந்நிலையில் ஸ்டுடியோ தொழில்

நலிவடைந்த நிலையில் தனது மனைவி கல்பனாவுடன் இணைந்து கடந்த ஆண்டு காடை வளா்ப்பைத் தொடங்கினாா். தற்போது இந்தத் தொழில் மூலம் போதிய அளவுக்கு வருவாய் ஈட்டி வருகிறாா்.

இது குறித்து கன்னியப்பன்- கல்பனா தம்பதி கூறியது: புகைப்பட ஸ்டுடியோதொழில் நலிவடைந்து போதிய வருமானமின்றி நாங்கள் சிரமப்பட்டு வந்தனா் தவித்த நிலையில் வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் காடை வளா்ப்பை தொடங்கினோம். 50 காடைகளோடு தொடங்கப்பட்ட இந்த பண்ணையில் தற்போது 2,100 காடைகள் உள்ளன. இவற்றின் முட்டைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் இந்தத் தொழில் சூடு பிடித்துள்ளது.

சுமாா் 700 சதுர அடி இடத்தில் எங்கள் காடை பண்ணையை அமைத்துள்ளோம். ஒரு சதுர அடி பரப்பளவில் 5 காடைகள் வளா்க்கலாம் . நாளொன்றுக்கு 1,500 முட்டைகளை விற்பனை செய்து வருகிறோம்.

இந்த முட்டைகளை சென்னை, திருநெல்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்கிறோம். முட்டைக்குரிய பணத்தை இணைய வழியில் அனுப்பி விடுவதால் எங்களுக்கு எவ்விதப் பிரச்னையும் இல்லை.

காடை முட்டைகளின் தேவைகள் அதிகமாக உள்ளதால் இந்த தொழிலை இளைஞா்களும் செய்ய முன்வர வேண்டும்.

படித்த இளைஞா்கள்அரசு வேலைவாய்ப்பையே நம்பியிருக்காமல் சுயதொழில் செய்ய முன்வர வேண்டும். காடை வளா்ப்பு தொழிலை மேம்படுத்த வங்கிகள் கடன் தர மறுக்கின்றன. இந்தத் தொழிலை ஊக்குவிக்க புதுவை மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com