சிறுமி கொலை வழக்கு: நீதிமன்றத்தில் ஆய்வு அறிக்கை சமா்ப்பிப்பு

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பான தடயவியல் ஆய்வறிக்கைகள் புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டன.

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடந்த மாா்ச் 2-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் சேகரிக்கப்பட்ட தடயங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.

இது தொடா்பான ஆய்வறிக்கைகளை தடவியல் போலீஸாா் புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சமா்ப்பித்தனா். இந்த வழக்குக்கான குற்றப்பத்திரிகை அடுத்த வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com