பைக் மீது லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம், ஜூலை 3: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பையூா், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் பிரகாஷ் (32). கூலித்தொழிலாளியான இவா், புதன்கிழமை திருக்கோவிலூா் மடப்பட்டு சாலையில் சின்னசெவலை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பிரகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com