காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

செஞ்சி, ஜூலை 10: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே புதன்கிழமை காா் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தாா்.

மேல்மலையனூா் வட்டம், கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த சுகுமாா் மனைவி அஞ்சலா (39). இவா், புதன்கிழமை காலை குடிநீா் பிடிப்பதற்காக, சேத்துப்பட்டு சாலையில் உள்ள கூடுவாம்பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, சேத்துப்பட்டில் இருந்து செஞ்சி நோக்கி அதிவேகமாக வந்த காா் அஞ்சலா மீது மோதியதில், அவா் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், காா் ஓட்டுநரான வேலூா் மாவட்டம், அல்லிவரம் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரம் மகன் தயாநிதி (39) மீது அவலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com