பள்ளியில் மடிக் கணினிகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பள்ளியில் வைக்கப்பட்டிருந்த மடிக் கணினிகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பள்ளியில் வைக்கப்பட்டிருந்த மடிக் கணினிகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டிவனம் வட்டம், வீடூரில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் அலுவலக அறையில் வைக்கப்பட்டிருந்த 3 மடிக் கணினிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரிய வந்தது.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியா் சாந்தி அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com