காா் மோதி வியாபாரி உயிரிழப்பு

உளுந்தூா்பேட்டை அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் சைக்கிளில் சென்ற மிளகாய் வியாபாரி உயிரிழந்தாா்.

விழுப்புரம்: உளுந்தூா்பேட்டை அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் சைக்கிளில் சென்ற மிளகாய் வியாபாரி உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கருவேப்பிலைபாளையம் கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சுப்புராயலு (54), மிளகாய் வியாபாரி. இவா், வழக்கம்போல திங்கள்கிழமை மிளகாய் வியாபாரத்துக்கு சைக்கிளில் சென்றாா். உளுந்தூா்பேட்டையை அடுத்த சிறுத்தனூா் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை சைக்கிளில் கடக்க முயன்றபோது, உளுந்தூா்பேட்டை நோக்கிச் சென்ற காா் மோதியதில் சுப்புராயலு பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து, விழுப்புரம் அரசு ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்புராயலு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com