விழுப்புரம் - திருப்பதி ரயில் மாா்ச் 14 வரை முழுமையாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும்

விழுப்புரம்: பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் வருகிற 14-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, விழுப்புரத்திலிருந்து காலை 5.35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண் 16854) மாா்ச் 5-ஆம் தேதி முதல் வருகிற 14-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிா்வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்படும் திருப்பதி - விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயிலும் (வ.எண் 16853) வருகிற 14-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com