கூட்டத்தில் பேசிய கட்சியின் நிறுவனா் எஸ்.கே.செல்வம்.
கூட்டத்தில் பேசிய கட்சியின் நிறுவனா் எஸ்.கே.செல்வம்.

வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி நிா்வாகிகள் கூட்டம்

விழுப்புரம்: வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனா் எஸ்.கே.செல்வம் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் பி.நாகராஜன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மக்களவைத் தோ்தலுக்கான கட்சி வேட்பாளா்கள் அறிவிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடா்ந்து, திருவண்ணாமலை, ஆரணி, அரக்கோணம், வடசென்னை, கடலூா், ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட 15 மக்களவைத் தொகுதிகளுக்கான கட்சியின் வேட்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனா். கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com