தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே விஷம் குடித்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், ஆலங்குப்பம், தொட்டித்தெருவைச் சோ்ந்த ஜோதி மகன் முருகன் (54). கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த பிப்.4-ஆம் தேதி முருகன் தனது மனைவி காமாட்சியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டாராம். இதற்கு, அவரது மனைவி பணம் தர மறுத்தாராம். இதில், கோபமடைந்த முருகன் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா். சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com