விளவங்கோடு இடைத்தோ்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

விளவங்கோடு இடைத்தோ்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்காக, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

விழுப்புரம்-காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகேயுள்ள அரசு சேமிப்புக் கிடங்கில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்காக அனுப்பி வைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதனை பாா்வையிட்ட பின்னா், ஆட்சியா் சி.பழனி கூறியது: இந்தியத் தோ்தல் ஆணையம், தமிழக தலைமைத் தோ்தல் அலுவலரின் உத்தரவுபடி, விழுப்புரத்திலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவி மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி (விவிபேட்) ஆகியவற்றில் தலா 550 எண்ணிக்கையில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா். நிகழ்வில், விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் காஜா சாகுல் ஹமீது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தமிழரசன், வட்டாட்சியா்கள் வசந்த கிருஷ்ணன் (விழுப்புரம்), கணேஷ் (தனி வட்டாட்சியா்) மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com