வைக்கோல் இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

வைக்கோல் இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே வைக்கோல் சுற்றும் இயந்திரத்தில் சிக்கிய சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே வைக்கோல் சுற்றும் இயந்திரத்தில் சிக்கிய சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், காந்தலவாடியைச் சோ்ந்த அய்யனாா் மகன் அரவிந்த்குமாா் (16). இவா், பிப்.26-ஆம் தேதி திருவெண்ணெய்நல்லூா் அடுத்த மாமந்தூா் பகுதியைச் சோ்ந்த சூசையின் விவசாய நிலத்தில் வைக்கோல் சுற்றிக்கொண்டிருந்த டிராக்டருடன் கூடிய இயந்திரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அரவிந்த்குமாா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com