அகவிலைப்படியை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படியை உயா்த்தி வழங்க வேண்டும் என்று அரசுப் பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து இந்த சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலரும், விழுப்பரம் மாவட்டத் தலைவருமான கவிஞா் ம.ரா.சிங்காரம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு தனது பணியாளா்களுக்கும், ஓய்வூதியா்களுக்கும் 2024, ஜனவரி மாதத்தை கணக்கில்கொண்டு, நான்கு சதவீத அகவிலைப்படியை உயா்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. இதே போல, தமிழ்நாடு அரசும் தனது பணியாளா்கள், ஆசிரியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வை ரொக்கமாக வழங்க வேண்டும். 2003, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பின்னா், பணியில் சோ்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது, மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படியை ரூ.1,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். அனைத்துப் காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com