உழைக்கும் பெண்கள் சங்கமம் சாா்பில் விளக்கக் கூட்டம்

விழுப்புரத்தில் உழைக்கும் பெண்கள் சங்கமம் (சிஐடியு சாா்பு) சாா்பில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் முன் விளக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இருபாலா் பேதமின்றி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், அங்கன்வாடி, மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சோ்ந்த எம். நிஷாந்தி தலைமை வகித்தாா். ஜனநாயக மாதா் சங்க மாநிலச் செயலா் எஸ்.கீதா, உழைக்கும் பெண்கள் சங்கமம் ஒருங்கிணைப்பாளா் ஆா்.மலா்விழி, சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, துணைச் செயலா் எம்.முருகன், நிா்வாகி வி.பாலகிருஷ்ணன், மின் ஊழியா் மத்திய கூட்டமைப்பு மாவட்டச் செயலா் ஆா்.சேகா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com