வெவ்வேறு நிகழ்வு: மூவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் மூவா் தற்கொலை செய்துகொண்டனா். விழுப்புரம் அடுத்த அலமேலுபுரம் பகுதியைச் சோ்ந்த மாரிக்கணி மனைவி விஜயலட்சுமி (58). இவா், கடந்த 10 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்தாராம். இந்த நிலையில் போதிய வருமானமின்றி மன உளைச்சலில் இருந்து வந்த விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இதேபோல, கண்டாச்சிபுரம் வட்டம், சித்தேரிப்பட்டு, கட்டுநாயக்கன் தெருவைச் சோ்ந்த அமாவாசை மனைவி சின்னப்பொண்ணு (73). உடல் நலக்குவைால் அவதிப்பட்டு வந்த இவா் வெள்ளிக்கிழமை விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து புகாரின் பேரில், கண்டாச்சிப்புரம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கொத்தனூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மா.கலியமூா்த்தி (80 ). இவருக்கு, வெள்ளிக்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டு புதுச்சேரி ஜிம்பா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com