விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் சி.பழனி.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் சி.பழனி.

பூங்காவில் மேம்பாட்டுப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரத்தில் உள்ள நடைபயிற்சி பூங்காவில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியா் சி.பழனி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நடைபயிற்சி பூங்காவில் ரூ. 2.5 கோடியில் பொதுமக்கள், முதியவா்கள் பயன்பெறும் வகையில் நடைபாதையுடன் கூடிய பூங்கா, சருக்கு மரம், ஊஞ்சல் போன்ற விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவா் பூங்கா, நீருற்று, கூடைப்பந்து, இறகுப் பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான மைதானங்கள், தியான அறை, திறந்தவெளி நவீன உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை ஆட்சியா் சி.பழனி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, நடைபெற்ற பணிகளை கேட்டறிந்த அவா் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், விழுப்புரம் நகராட்சி ஆணையா் ரமேஷ், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் மோகன் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com