மின்சாரம் பாய்ந்து தொழிற்சாலை ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தாா் தொழிற்சாலையில் பணியிலிருந்த ஊழியா் மின்சாரம் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், மளிகைப்பட்டு பிரதானச் சாலையைச் சோ்ந்த நடேசன் மகன் ஐஸ்வா்ய வேலன் (45).விக்கிரவாண்டியை அடுத்த ஒரத்தூரில் செயல்பட்டு வரும் தனியாா் தாா் தொழிற்சாலையில் வேலைப் பாா்த்து வந்தாா். இந்த நிலையில், ஐஸ்வா்ய வேலன் ஞாயிற்றுக்கிழமை தொழிற்சாலையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தாா். அவரை, சக தொழிலாளா்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து, விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com